தாய் காவியத்தில் ஜெகன்நாத்!

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (18:10 IST)
கதை விவாதத்திற்குப் பின் கதை மாறும். தாய் காவியத்தில் இயக்குனரே மாறியிருக்கிறார்.

ரஷ்ய நாவலாசிரியர் மாக்சிம் கார்கியின் தாய் நாவலை தமிழில் கவிதை நடையில் எழுதினார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதனை தழுவி பாடலாசிரியர் பா. விஜய் நடிக்க தாய் காவியம் படத்தை தொடங்கினர். இயக்கம் பாலி ஸ்ரீரங்கம்.

சீனாவில் முதலில் பாடல் காட்சியை எடுத்தனர். இதில் பாதி பட்ஜெட் கரைந்ததாக தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது. கதையிலும் பா. விஜய் உள்பட பலருக்கும் திருப்தியில்லை.

சீனாவிலிருந்து திரும்பியதும் படப்பிடிப்பை தொடராமல் மகாபலிபுரத்தில் மீண்டும் கதை விவாதத்தை நடத்தினர். நியாயமாக கதைதானே மாறியிருக்க வேண்டும்? இங்கு இயக்குனர் பாலி ஸ்ரீரங்கத்தை படத்தைவிட்டு நீக்கியுள்ளனர். அவருக்கு பதில் ராமன் தேடிய சீதை இயக்குனர் ஜெகன்நாத் படத்தை இயக்குகிறாராம்!

வெப்துனியாவைப் படிக்கவும்