பார்த்திபனின் போலீஸ் படம்!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (19:37 IST)
நக்க‌ல் அதிகமுள்ள பார்த்திபன் காக்கி உடையில்! கற்பனையே சுவாரஸ்யமாக இருக்கிறது. விரைவில் இது நிஜமாகப் போகிறது.

வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என சிக்கல் மிகுந்த படங்களை அடுத்தடுத்து தயாரித்த செவன்த் சானல் நாராயணன் அடுத்து பார்த்திபன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறாராம்.

செய்கிற சோதனை முயற்சிகள் அனைத்தும் சொதப்பினாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பார்த்திபன், மீண்டும் வித்தியாசமான ஸ்கிரிப்டுடன் களம் காண்கிறார். இது போலீஸ் கதையாம்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனுக்காக நீண்ட தலைமுடி வளர்தவர், படப்பிடிப்பு முடிந்தும் அதனை ட்ரிம் செய்யாமல், கிளிப் மாட்டி பராமரிக்கிறார்.

போலீஸ் கதைக்கு ரவுடி மாதிரி தலைமுடி எதற்கு?

பட அறிவுப்புக்கு முன்பே இப்படி குழம்ப வைப்பது பார்த்திபன் ஸ்டைல். இந்த முறையாவது குடைக்குள் மழை வரவச்சுடுங்க பாஸ்!

வெப்துனியாவைப் படிக்கவும்