சர்வம் படத்தில் நடித்துவரும் ஆர்யா, அடுத்து சுராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். சேலம் ஏ. சந்திரசேகரன் தயாரிப்பு. இந்தப் படத்திற்குப் பிறகு இகோர் இயக்கத்தில் அவர் நடிப்பதாக பேச்சு.
காதை மறைக்கும் முடி, கண்ணில் மிதக்கும் போதை... விரல் நீட்டுகிறவனை எல்லாம் வெட்டிப்போடும் ரவுடி வேடத்தில் நடித்துகூ கொண்டிருந்த ஆர்யாவுக்கு சீப்பு கொடுத்து தலை வார வைத்ததும், இளம்பெண்களின் கனவு நாயகனாக்கியதும் கலாபக் காதலன் படம். இதனை இயக்கிய இகோரும், ஆர்யாவும் தொழிலைத் தாண்டிய நண்பர்கள்.
கலாபக் காதலனுக்குப் பிறகு திக்... திக்... என்ற திகில் படத்தை இயக்கினார் இகோர். சரண்யா, மும்தாஜ் நடித்த இப்படம் பெட்டிக்குள்ளிருந்து வரும் வழியைக் காணோம்.
இதனால் மீண்டும் ஆர்யாவிடமே மீண்டும் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம் இகோர். சர்வம் மற்றும் சுராஜ் இயக்கும் படம் முடிந்தபிறகு பார்க்கலாம் என உறுதி அளித்துள்ளாராம் ஆர்யா.
இந்த கலாபக் காதல் கூட்டணி அடுத்த வருட தொடக்கத்தில் மீண்டும் ஒன்றிணையலாம்!