கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நல்லபடியாக நடக்குமா?
வேறொன்றுமில்லை. தனித்தனியே படங்களை தயாரித்த இயக்குனர்கள் சேரன், அமீர், பாலா மூவரும் இணைந்து கூட்டாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
சினிமாவுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது கூட்டணி விஷயத்தில் ரொம்ப சரி. சினிமாவிலும் எந்தக் கூட்டணியும் ரொம்ப நாள் நீடித்ததில்லை. உதாரணம், ஒயிட் எலிஃபெண்ட்ஸ்!
செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, அரவிந்த் கிருஷ்ணா இணைந்து உருவாக்கிய இந்த தயாரிப்பு நிறுவனம் முதல் அடியை எடுத்து வைப்பதற்குள், அடையாளமின்றி ஆவியானது.
சேரன், அமீர், பாலா மூவரும் உணர்ச்சி மிகுந்த கலைஞர்கள். இவர்களுக்கு பிஸினஸ் ஒர்க்-அவுட் ஆகுமா?
முயற்சி திருவிணையாகும் முன் திருஷ்டி பரிகாரமாக ஏன் இப்படியொரு சந்தேகம். வரவேற்போம் வாழ்த்துவோம்!