ஆயிரத்தில் ஒருவன் முடிந்ததும் லிங்குசாமி படத்தில் கார்த்தி நடிப்பதாக சொல்லப்பட்டது. தயாரிப்பு லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்.
கதை, ஸ்கிரிப்ட் என புதிய படத்துக்கு பிஸியாக வேலை பார்த்தார் லிங்கு. என்ன பயன்? கார்த்திக்கு கதை பிடிக்கவில்லை. கதையை மாற்றுங்கள் நடிக்கிறேன் என்று அவர் கூறியது பத்திரிக்கைகளில் வெளிவர அப்படியொன்றும் இல்லை என லிங்குசாமி தரப்பு பூசி மொழுகியது. கார்த்தி ஜோடி நயன்தாரா என புதிய தகவல் ஒன்றையும் கசியவிட்டனர்.
ஆனால், உண்மை நிலவரம் வேறு. கதையை மாற்றுங்கள் என்ற தனது கோரிக்கையிலிருந்து இறங்கி வரவில்லை கார்த்தி. படம் தொடங்கப்படுமா என்பது இன்னும் இழுபறியில். தோதான ஹீரோ கிடைத்தால் கார்த்தியை கழட்டிவிடவும் லிங்குசாமி தயார்.
மாதவன், விஷால் இருவரையும் ஆக்சன் ஹீரோவாக்கியவருக்கே இந்த நிலை. பீமா வெற்றி பெற்றிருந்தால் கதையை மாற்றச் சொல்லியிருப்பாரா கார்த்தி? சினிமாவில் ஒருவரின் முகவரி அவரின் கடைசி வெற்றி என்பது இதுதானா!