காசு பத்தலை - கைவிரித்த இலியானா!

திங்கள், 28 ஜூலை 2008 (20:36 IST)
கோடிக்கு ஒரு ரூபாய் குறைந்தாலும் அடுத்த ஆளைப்பாரு என கிளம்பி விடுகிறார் கேடி நாயகி இலியானா.

இவரின் பெரிய நோட்டு சம்பளம் கேட்டு பொறி கலங்கிப்போன தமிழ்த் தயாரிப்பாளர்கள் ஏராளம். ரஜினி படத்துக்கே தனது சம்பள ராவடியிலிருந்து இவர் இறங்கி வரவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுல்தான் தி வாரியலில் ரஜினி ஜோடியாக நடிக்க இலியானாவை அணுகினார். செளந்தர்யா. 20 நாள் கால்ஷீட், சம்பளம் இவ்வளவு என குறைவான தொகையை கூறியிருக்கிறார். ரஜினி ஜோடி என்றால் பேரம் பேசமாட்டார்கள் என்பது செளந்தர்யாவின் நம்பிக்கை.

ஆனால், இலியானா வேறு வகை. கோடிக்கு குறையக்கூடாது என காசில் குறியாயிருக்க, வேறு வழியின்றி விஜயலட்சுமியை ஒப்பந்தம் செய்தார் செளந்தர்யா.

ரஜினி பட வாய்ப்பு பறிபோனதில் இலியானாவுக்கு எந்த வருத்தமும் இல்லை. ரஜினியுடன் நடிக்க ஆசைதான்... ஆனா காசு பத்தலையே என கைவிரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்