மீண்டும் ரம்பா!

வெள்ளி, 25 ஜூலை 2008 (20:03 IST)
த்ரீ ரோசஸ் படமெடுத்து கழுத்து வரை கடனாளியான ரம்பா திரும்பி வந்திருக்கிறார். வந்தாரை வாழவைக்கும் தமிழ் சினிமா, ரம்பாவையும் வாரி அணைத்திருக்கிறது.

ரஷ்யன் என்பவர் இயக்கும் விடியும் வரை காத்திரு படத்தில் ரம்பாதான் நாயகி. முரளி நடிக்கும் மறு அவதாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.

ரம்பா திரும்பி வந்ததை அறிந்த டி.வி. மெகா சீரியல் பார்ட்டிகள் அவரை பருந்தாக வட்டமிடுகின்றனர். லட்சங்களில் கொடுத்தாலும் மெகா சீரியலுக்கு விருந்தாக மாட்டேன் என வீராப்பு காட்டுகிறார் ரம்பா.

எத்தனை நாளைக்கு இந்த விறைப்பு என நெட்டி முறிக்கிறார்கள் சீரியலில் நடித்துவரும் ரிட்டையர்ட் சினிமா நடிகைகள்.

வெப்துனியாவைப் படிக்கவும்