மனம் மாறிய மாதேஷ்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (19:56 IST)
அரசாங்கம் படத்தை முடித்ததும் நடிகர் சூர்யாவைப் பார்த்து கதை சொன்னார் மாதேஷ். இந்த சந்திப்பு சூர்யா அயன் படிப்பிற்காக வெளிநாடு சென்றபோது நடந்தது.

ஒன்லைன் நன்றாக இருப்பதாக அப்போது கூறியிருக்கிறார் சூர்யா. இந்த ஒரு வரி நம்பிக்கையில் சூர்யாவின் கால்ஷீட் கிடைக்குமென நம்பிக்கொண்டிருந்தார் மாதேஷ்.

அயன், சிங்கம், முருகதாஸின் சொந்தப் படம் என இரண்டு வருடங்களுக்கு சூர்யாவின் கால்ஷீட் டைரி ·புல். இதனை லேட்டாக அறிந்த மாதேஷ், யதார்த்தம் உணர்ந்து, சூர்யாவுக்கு கதை பண்ணுவதை கைவிட்டுள்ளார்.

மீண்டும் விஜயகாந்தை வைத்து படமெடுக்கும் எண்ணத்துடன் அவரை அணுக, கேப்டனும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். நடுவில் அரசாங்கத்தை இந்தியில் இயக்கவும் முயன்று வருகிறார் மாதேஷ்.

வெப்துனியாவைப் படிக்கவும்