புளோரா - விட்டு விடுதலையாகி!

வியாழன், 24 ஜூலை 2008 (20:03 IST)
நானொரு பலிகடா என்று கம்பிகளுக்கு பின்னே கதறினார் புளோரா. அன்று யார் காதிலும் அவர் கதறல் விழவில்லை. போலி பாஸ்போர்ட்டில் அமெரிக்காவிற்கு ஆள் கடத்தினார் என்று குற்றம் சுமத்தி புளோராவை சிறையில் அடைத்தது போலீஸ்.

அதைவிட கொடுமை நடிகர் சங்கர் விதித்த தடை. தனது பிற உறுப்பினர்களை காப்பாற்ற, புளோராவை சங்க உறுப்பினர் பதவியிலிருந்தே ஒதுக்கி வைத்து தனது கறைகளை கழுவிக் கொண்டது.

சோதனை நெருப்பாற்றில் சுயமாக நீந்தி சிறை மீண்டுள்ளார் புளோரா. எனது பாஸ்போர்ட்டை திருப்பித்தர வேண்டும் என்று அவர் தொடர்ந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

இவ்வளவு நாள் கண்ணை மூடிக் கொண்ட நடிகர் சங்கம், தனது கருணை மனசை திறந்திருக்கிறது. புளோரா மீதான தடையை அது நீக்கி உத்தரவிட்டுள்ளது.

நிருபர்களை சந்தித்த புளோரா தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். குசேலன், திண்டுக்கல் சாரதி படங்களில் நடிப்பதகாவும், இனி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார் அவர். புளோராவின் பேச்சில் புதிய நம்பிக்கையை கேட்க முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்