வடிவேலுக்கு சனி உச்சத்தில் இருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் ஒவ்வொன்றாக நடந்து வருகின்றன. 'வாயக் கொடுத்து புண்ணோடு ஊர் போய் சேரக்கூடாதுடா சாமி' என்று அவர் சொன்ன டயலாக்கை அவரை தற்போது நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கேப்டனோடு மோதி, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்த வடிவேலு, அடுத்து தான் நடித்த 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படம் செம அடி வாங்க... கொஞ்சம் அடங்கிப் போனார்.
அதையடுத்து இயக்குனர் ஷக்தி சிதம்பரத்தோடு வாயைக் கொடுத்து வாங்கி கட்டிக் கொண்டு இனி என் எந்த படத்திலும் வடிவேலு இல்லை என்று அறிக்கைவிட்டார். அதன்பின் சுந்தர் சி-யோடு சண்டை.
தற்போது தனுஷ்-தமன்னா படத்தின் இயக்குனர் சுராஜிடமும் சண்டைப் போட்டுக்கொண்டு படப்பிடிப்பிலிருநூது பாதியில் கிளம்பி வந்துவிட்டார் வடிவேலு. இப்போது அவருக்குப் பதிலாக விவேக் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சினிமாவுக்காரர் இரண்டுபட்டால் நகைச்சுவை நடிகருக்கு கொண்டாட்டம் என்றாகிவிட்டது தமிழ் சினிமாவில்.