ஜோதா அக்பர் போன்ற கதைப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்கள். வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் பலத்த அடி. ஒருமுறை சூடுபட்டவர்கள் கதையிலிருந்து சதைக்கு மாறியிருக்கிறார்கள்.
மல்லிகா ஷெராவத், ரேகா நடித்த இந்திப் படம் மல்லிகா காமினி என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டி, மனோஜ் பாஜ்பாய் நடித்து 2005-ல் வெளிவந்த Fareb படமும் தமிழுக்கு வருகிறது. கணவன், மனைவி உறவு நெருடலைச் சொல்லும் இப்படத்தில் ஷில்பாவின் தங்கை ஷமிதாவும் நடித்துள்ளார். அக்கா, தங்கை போட்டி போட்டு கவர்ச்சி கடை விரித்திருக்கும் இப்படத்திற்கு தமிழில் வைத்திருக்கும் பெயர் கா சதிலீலாவதி!