பாலுமகேந்திரா படத்தில் தபு?

புதன், 16 ஜூலை 2008 (19:45 IST)
பாலுமகேந்திரா தனது அனல் காற்று பட அறிவிப்பை வெளியிட்டு பருவங்கள் பல கடந்துவிட்டது. இன்னும் படப்பிடிப்பை தொடங்கவில்லை கேமரா கவிஞர். கதாநாயகிதான் பிரச்சனை.

பாலுமகேந்திராவுக்கு ப்ரியாமணியை நடிக்க வைக்க விருப்பம். அவரோ நிற்பதற்கு நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறார். அவ்வளவு பிஸி.

தயாரிப்பாளர்கள் சைடில் நக்மாவை சிபாரிசு செய்கிறார்கள். ஆனால், அதுவும் சரிவரவில்லை. இந்நிலையில் பாலுமகேந்திரா நடிகை தபுவை சந்தித்து கதை சொல்லியுள்ளார். தபுவுக்கு கதை பிடித்திருப்பதாகவும் அவரே நடிப்பதாகவும் தகவல்.

இது ஒருபுறமிருக்க, அனல் காற்று குறித்து இன்னொரு விஷயமும் புகைகிறது. மெலினா என்ற மோனிகா பெலூசி நடித்த படத்தையே பாலுமகேந்திரா அனல் காற்று என்ற பெயரில் எடுக்கிறாராம்.

புகைதான் என்றாலும் அதில் விஷயம் இல்லாமல் இல்லை என்கிறார்கள் அனல் காற்று பற்றி அறிந்தவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்