தம்பிக்கு கன்னட ஜோடி!

செவ்வாய், 15 ஜூலை 2008 (19:47 IST)
தம்பிக்கு ஜோடி பார்த்து சோர்ந்துவிட்டார் இயக்குனர் பூபதி பாண்டியன். மலைக்கோட்டைக்குப் பிறகு இவர் தனது தம்பியை வைத்து இயக்கும் படம் நானும் என் சந்தியாவும்.

பெயரில் வரும் சந்தியாவுக்காக வேதிகா முதல் பூமிகா வரை யார் யாரையோ பார்த்தும் அண்ணன் பூபதிக்கு பிடிக்கவில்லை. மலையாள மீராநந்தனையும் முயன்று பார்த்தனர்.

இறுதியில் கன்னட நடிகை சுஹாசியை டிக் செய்துள்ளார் பூபதி பாண்டியன். என்றாலும், தம்பிக்கு ஏற்ற ஜோடி சுஹாசிதானா என்பதில் பூபதிக்கு இன்னும் தடுமாற்றம்தானாம்.

படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தம்பியின் பெயரை சொல்லவில்லையே, அர்ஜுன் பிரபு!

வெப்துனியாவைப் படிக்கவும்