மனது வைப்பாரா ரஜினி!

செவ்வாய், 15 ஜூலை 2008 (19:43 IST)
இந்தி தெலுங்குக்கு அடுத்தபடியாக அதிக திரைப்படங்கள் தயாராகும் மொழி தமிழ். வர்த்தகத்தை வைத்துப் பார்த்தால் தமிழ் தெலுங்குக்கு இணையானது.

பல கோடி புழங்கும் இந்த தொழிலுக்க சரியான ஃபிலிம் சிட்டி இருக்கிறதா என்றால் இல்லை. தமிழ்நாடு திரைப்பட நகரம், அதன் பொலிவை இழந்து பல வருடங்களாகிறது. தமிழில் படமெடுப்பவர்கள் ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி நோக்கி ஓடுகிறார்கள்.

இந்நிலையில் பெங்களூரு - மைசூர் சாலையில் புதிய திரைப்பட நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு திடீர் வருகை தந்த ரஜினிகாந்த், திரைப்பட நகரை சுற்றிப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

ரஜினி போன்றவர்கள் பிறர் உருவாக்கிய திரைப்பட நகரை பார்த்து வியப்பதை விட, தாங்களே ஒரு திரைப்பட நகரை உருவாக்கி பிறரை வியப்படைய வைப்பதே அழகு.

அதற்கு முன்முயற்சி எடுப்பாரா ரஜினி என்பதே தமிழ்த் திரையுலகின் கேள்வி.

வெப்துனியாவைப் படிக்கவும்