சென்னையில் பாலசந்தர் மற்றும் மனோரமாவிற்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
கலைத்துறையில் நீண்டநாள் சிறப்பாக பணியாற்றியதற்காக பாலசந்தருக்கும், மனோரமாவுக்கும் அமெரிக்காவின் கலி·போர்னியா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது. இந்தத் தகவலை சில நாட்கள் முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அறிவித்தனர்.
தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கலைக்காக சிறு துரும்பை கிள்ளிப் போடாதவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் அளித்துவரும் நிலையில், பாலசந்தருக்கும், மனோரமாவுக்கும் கிடைத்திருக்கும் கெளரவம் சிறப்பானது.
டாக்டர் பட்டம் பெறும் இவர்களுக்கு செப்டம்பர் மாதம் சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது. ரஜினி, கமல் உள்பட பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.