கிராம ராஜன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜன் மீண்டும் நடிக்கிறார். அரசியலிலும், சினிமாவிலும் ஏணி வழியாக ஏறி பாம்பு வழியாக சமர்த்தாக இறங்கிவிடுவது ராமராஜனின் வாழ்க்கை.
அரசியல் போனா போகட்டும் சினிமாவது கைவசம் இருக்கட்டும் என்று நடிப்பதில் இறங்கியுள்ளார். இவர் ஹீரோவாக நடிக்கப் போகும் படத்துக்கு 'மேதை' என்று சூட்டியிருக்கிறார்கள். ஹீரோயினாக ஜோதிர்மயி நடிக்கிறார்.
இயக்குநர் ஹரியின் உதவியாளர் என்.பி.ஜி. சரவணன் மேதையின் மூலம் இயக்குநராகிறார். நகைச்சுவைப் பகுதிக்கு வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கியுள்ளார்களாம். படப்பிடிப்பு அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படுமாம்.
யார் கண்டது, வெள்ளி விழா படமாக 'மேதை' அமைந்தாலும் ஆச்சர்யப்பட முடியாது. ஏனென்றால் ராமராஜனின் ஜாதகம் அப்படி?