மேஜர் அவதாரமெடுக்கும் மோகன்லால்!

செவ்வாய், 8 ஜூலை 2008 (19:53 IST)
'குருசேத்ரா' என்ற தலைப்பைப் பார்த்ததும் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் யுத்தம் நடந்த பூமியை மனதில் வைத்துக்கொண்டு இது புராணப் படம் என்று நினைத்தால் ஏமாந்துதான் போகவேண்டும்.

இது கார்கில் போரின்போது நமது எல்லையில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றிய படம். மோகன்லால் மேஜர் மகாதேவன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தனது 'அரண்' படத்தை அடுத்து இதிலும் லால் ஹீரோவாக நடிப்பது, இயக்குனர்-நடிகர் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனதுதான் காரணம் என்கிறார்.

குருசேத்ரா மலையாளத்தில் தயாராகி வந்தாலும் உடனடியாக தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. கிராமத்து இயக்குனர், காதல் இயக்குனர், பீரியட் ஃபிலிம் இயக்குனர் என்பதுபோல் இயக்குனர் மேஜர் ரவி பட்டாளத்து இயக்குனர் என்ற பட்டம் பெற்றாலும் அச்சரியப்படுவதற்கில்லை.

எல்லைப் பகுதிகளில் நமது வீரர்களின் நிலைமை என்ன என்பதைச் சொல்லப் போகும் குருசேத்ரா டீம் விரைவில் கார்கில் போர் ஏரியாக்களில் களம் இறங்கப் போகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்