அக்டோபரில் அரசியல்வாதி - பிரபு உறுதி!

சனி, 5 ஜூலை 2008 (20:38 IST)
அக்டோபர் 1 அப்பாவின் (சிவாஜி) 80வது பிறந்தநாள். அன்று எனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன்!

சேலத்தில் நடந்த ரசிகர் மன்ற விழாவில் பிரபு இப்படியொரு வெடியை வீச, அது பல இடங்களில் எக்குதப்பாக வெடித்தது.

பிரபுவின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது அண்ணன் ராம்குமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார். ஃபீல்டில் இல்லாத நிலையில் சிவாஜி குடும்பத்துக்கு ·பவர் தேவைப்படுகிறது. அதுதான் பிரபுவின் அரசியல் பிரவேசம்.

·பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவர் பதவியிலிருந்து கார்த்திக்கை நீக்கிய பிறகு, அந்தப் பதவிக்கு முக்குலத்தோரின் ஒட்டுமொத்த சாய்ஸ் பிரபு! அவர் தலையசைத்தால் தலைவர் பதவியை தாரைவார்க்க தேசிய தலைவர்களும் தயார். நட்புடன் இருக்கும் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போன்றவர்களை அரசியல் ரீதியாக பகைக்க வேண்டி வருமோ என்பதுதான் பிரபுவின் ஒரே தயக்கம்.

ஆனாலும், அக்டோபரில் அவர் அரசியல் சாயம் பூசப்போவது உறுதியாகிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்