சாந்தோம் ஆலயத்தின் திருவிழவுக்கே இத்தனைக் கூட்டம் சேராது. முதல்வர் தொடங்கிவைத்த தோமையார் திரைப்படத்தின் தொடக்க விழாவுக்கு, ஆலய வளாகம் தாண்டி, தார் சாலையிலும் மக்கள் வெள்ளம். சிறுபான்மையினரின் திரைப்படம் என்பதால் முதல்வரின் பேச்சில் பெரும்பான்மை அதுவே இடம்பெற்றது.
இதுவே (தி.மு.க. அரசு) சிறுபான்மை அரசுதான் என டைமிங்காக பேசியவர், தோமையார் என்று அழைப்பதால் வேறு எதுவும் நினைக்கக்கூடாது. அய்யர் என்றால் சிறந்தவர், உயர்ந்தவர் என வில்லங்கத்துக்கு 'லீட்' கொடுத்தார்.
கூட்டம் முடிந்து ஜனம் கலையும் போது காதில் விழுந்த செய்த ஆச்சரியப்படுத்தியது. மெல்கிப்ஸனின் ஃபேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்டில் இயேசுவாக நடித்தவரை தோமையார் திரைப்படத்தில் இயேசுவாக நடிக்க கேட்டிருக்கிறார்களாம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோமையார் சென்னையில் சஞ்சரித்தபோது திருவள்ளுவர் மயிலையில் வாழ்ந்து வந்தாராம். இருவரும் சந்தித்து கொண்டதாக வாய்வழி கதைகள் கூறுகின்றன. தோமையார் படத்தில் இதையும் ஒரு காட்சியாக வைக்க இருக்கிறார்கள்.
திருவள்ளுவராக நடிக்க ரஜினியிடம் கேட்கலாம் என அருட்தந்தைகள் ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவ படத்தில் பாபா பக்தர்! ம்... கேட்க நல்லாதான் இருக்கு.