இன்று இருபடங்கள்!

வெள்ளி, 4 ஜூலை 2008 (19:16 IST)
கடந்த ஆறு மாதத்தில் புதமுகங்களின் எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. சரியாகச் சொன்னால் அஞ்சாதே, யாரடி நீ மோகினி, சந்தோண் சுப்பிரமணியபுரம் தவிர வேறு எதுவும் சோபிக்கவில்லை.

மீடியம் பட்ஜெட் படங்கள் அனேகமாக அனைத்துமே காலி. இந்நிலையில் இரண்டு மீடியம் பட்ஜெட் படங்கள் வெளியாகின்றன. (உளியின் ஓசை இன்று வெளியானாலும் அது மெகா பட்ஜெட்)

எம்மகன் இயக்குனர் திருமுருகனின் இரண்டாவது படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு. எம்மகன் வெற்றியடைந்ததால் முனியாண்டிக்கு அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு.

பரத், வடிவேலு, வித்யாசாகர், பாஸ்கர் சக்தி என எம்மகன் டீமே இதிலும் என்பது ப்ளஸ். உலகம் நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், இந்த கிராமத்து கதையின் வெற்றி சூழலுக்கு மிக அவசியம்.

தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் தானே தயாரிப்பாளராக சுப்பிரமணியபுரத்தை உருவாக்கியிருக்கிறார் சசிகுமார். இது இவருக்கு முதல் படம். எண்பதுகளின் உடை, சிகை, பேக்ட்ராப் என புகைப்படமே சுண்டி இழுக்கிறது.

இவ்விரு படங்களும் வெற்றி பெறுவது இன்டஸ்ட்ரியின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.

வெப்துனியாவைப் படிக்கவும்