கையை முறித்துக்கொண்ட கவிஞர்!

வியாழன், 3 ஜூலை 2008 (16:03 IST)
பாடல் எழுதிக் கொண்டிருந்தவர், பார்ட்டைமாக தலைமுடி வளர்த்து சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார். ஹீரோதான் இலக்கு. அதற்குமுன் முன்னோட்டமாக அமீரின் யோகியில் சின்ன வேஷம். பாடலாசிரியர் சினேகன் பற்றிதான் சொல்கிறோம்.

அமீர் படங்களில் மொத்தப் பாட்டும் சினேகனுக்கு குத்தகைக்கு விடப்படும். அந்தப் பாசத்தில் அமீர் கேட்டுக்கொண்டதால் யோகயில் தாதா வேஷம் கட்டினார் சினேகன்.

சண்டைக் காட்சி ஒன்றில் இசகு பிசகாக எகிறி குதிக்க, பாடல் எழுதும் கை புரண்டுவிட்டது. வலியால் துடித்தவரை வைத்தியம் பார்த்து தேற்றியிருக்கிறார்கள்.

விரைவில் சினேகன் சோலோ ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வரயிருக்கிறது. பாடலாசிரியனுக்கு பரிவட்டம் கட்டுமா தமிழ் ஜனம்?

வெப்துனியாவைப் படிக்கவும்