அறிமுகமாகி அரை டஜன் படங்கள் நடித்துவிட்டார். இருந்தும் டேக் ஆஃப் ஆகாமலே இருக்கிறது விக்ராந்தின் சினிமா கேரியர்.
அதிகம் எதிர்பார்த்த அகத்தியனின் நெஞ்சத்தை கிள்ளாதேயும் சரியாக போகாத நிலையில், எந்த திசையில் நகருவது என தெரியாமல் முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டுள்ளார். ராஜ்கிரணுடன் நடிப்பதாக இருந்த அலங்காநல்லூரும் இப்போதைக்கு தொடங்குவதாக இல்லை.
கூட்டிக் கழித்தால் விஜயகாந்துடன் நடிக்கும் எங்கள் ஆசான் தவிர விக்ராந்துக்கு வேறு படங்களில்லை. சட்டியே இல்லாமல் எப்படி அகப்பையில் அள்ளுவது?
குடும்பமாக உக்காந்து யோசித்து புதிய வழி ஒன்று கண்டுபிடித்துள்ளனர். விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூடில் படித்தவர். அவரை இயக்குனராக்கி ஒரு படம் தயாரிப்பது. ஹீரோ விக்ராந்த்!
இந்த குடும்ப பிளானில்தான் தற்சமயம் அறுந்து போகாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது, விக்ராந்தின் கேரியர்.