பட்டாளத்தில் பாண்டு மகன்!

திங்கள், 30 ஜூன் 2008 (20:58 IST)
சிக்ஸ்பேக் அப்சுடன் அசத்தலாக இருக்கிறார் குரு. சூர்யாவுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் கட்டுடல் ஹீரோ இவர்.

காமெடி நடிகர் பாண்டுவுக்கு இப்படி சிக்ஸ்பேக் அப்சுடன் ஒரு பையன் இருப்பது பட்டாளம் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணாவுக்கு தெரியாது. ஏதோ மாடல் என்று நினைத்தே குருவை தனது பட்டாளம் படத்தில் ஒப்பந்தம் செய்தார். வாய்ப்பு உறுதியாகும் வரை வாயே திறக்கவில்லையாம் குரு.

நடிப்பது உறுதியான பிறகு, தான் காமெடி நடிகர் பாண்டுவின் மகன் என்ற உண்மையை குரு வெளிப்படுத்த இயக்குனர் மட்டுமில்லாது தயாரிப்பாளர் லிங்குசாமிக்கும் ஆச்சரியம்.

குடும்பப் படங்களைவிட குத்து வெட்டு படங்கள்தான் என்னுடைய குறி என்றார் குரு. உடம்புக்கேற்ற ஆசைதான்!

வெப்துனியாவைப் படிக்கவும்