எஸ்.ஏ.சி.யை இழுத்த பாரதிராஜா!

திங்கள், 30 ஜூன் 2008 (20:58 IST)
சென்னையில் நடந்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் வேட்பாளர்கள் அறிமுக விழா நிகழ்ச்சியில் அனைவரின் புருவத்தையும் உயர வைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகரன்.

நேற்று வரை ராம. நாராயணனின் முன்னேற்ற அணிக்கு எதிராக கேயாரின் முற்போக்கு அணியில் வேலை பார்த்தவர் எஸ்.ஏ.சி. முற்போக்கு அணி சார்பில் நிர்வாகக் குழு பதவிக்கு எஸ்.ஏ.சி. நிற்பதாகக் கூட கூறப்பட்டது. அவர் எப்படி எதிர் முகாமில்?

இந்த அந்தர் பல்டிக்கு பின்னாலிருந்தவர் பாரதிராஜா. அவர்தான் முன்னேற்ற அணி வெற்றிபெற்றால் கிடைக்கயிருக்கும் நன்மைகளை எடுத்துக்கூறி எஸ்.ஏ.சி.யை அணி தாவ வைத்துள்ளார்.

பாரதிராஜாவால் அணி தாவிய இன்னொருவர் இயக்குனர் அமீர்.

வெப்துனியாவைப் படிக்கவும்