நடித்த இரண்டு படங்களும் ஓடவில்லை. ஓவர் பில்டப்புடன் தொடங்கிய கலகம், ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட்டது.
அஸ்தமனத்தை நோக்கிச் சென்ற திரைவாழ்க்கையில், நடிப்பிலிருந்து பாடலாசிரியராக உருமாறியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
மின்சாரம் என்ற படத்துக்காக டி. தேவன் இசையில் திருமா எழுதிய புரட்சிப் பாடலொன்று பதிவு செய்யப்பட்டது. விழித்தெழு மனிதா விழித்தெழு என்ற அந்தப் பாடல் முழுக்க புரட்சியை ஆறாக ஓடவிட்டிருக்கிறார் திருமா. திப்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் சிறுத்தைகளின் தேசிய கீதமாக அமைய வாய்ப்புள்ளது.
இதேபோன்று புரட்சிகரமான சிச்சுவேஷன் என்றால் தொடர்ந்து பாடல் எழுத திருமா ரெடி! கேட்க நீங்க ரெடியா?