தனிநபர் தாக்குதலை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல். வேட்புமனு தாக்கல் செய்ததோடு பரஸ்பரம் போட்டிகளால் மோதிக் கொண்டனர் முன்னேற்ற மற்றும் முற்போக்கு அணியினர்.
தமிழ் அல்லாத மொழிகளிலும் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் நான் பதவிக்காக அலைந்ததில்லை. தமிழ்நாட்டில்தான் தமிழர் அல்லாதவர்கள் பதவிக்கு வரத் துடிக்கிறார்கள் என்ற ரீதியில் எதிரணி கேயார், ஏ.எம். ரத்னம் போன்றவர்களை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார் ராம. நாராயணன்.
ராதிகா வேட்புமனு தாக்கல் செய்தபோது, என்னுடைய படத்தை வெளியிடவே இவர்களால் உதவி செய்ய முடியவில்லை. முதல்வரை சந்தித்துதான் படத்தை வெளியிட்டேன். எனக்கே இந்த கதியென்றால் மற்ற தயாரிப்பாளர்களின் கதி என்ன? அதனால்தான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார்.
அனல் கக்கும் விமர்சனங்கள் அடுத்தவரை சுட்டெரிக்காத வரை எல்லாமே நல்லதுதான்!