மீரா நந்தன் - பாட்டிலிருந்து நடிப்புக்கு!

வியாழன், 26 ஜூன் 2008 (19:41 IST)
நடித்து ஒரு படம் வெளிவரவில்லை. அதற்குள் அட்வான்சுடன் மீரா நந்தனின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

விகடனின் வால்மீகி படத்தில் குழந்தைகளுக்கு ப்ளே ஸ்கூல் நடத்துகிறவராக நடிக்கிறார் மீரா நந்தன். தமிழில் இவருக்கு வால்மீகி முதல் படம் என்றாலும், மலையாளத்தில் இவர் பழகிய முகம்.

முகத்தைவிட மீராவின் குரல் கேரளாவில் பிரபலம். பல ஆல்பங்களில் பாடி, காது வழியாக மலையாளிகளின் மனம் கவர்ந்துள்ளார். மீரா பற்றி தெரியாத விஷயம், அவர் தமிழிலும் பாடியிருப்பது. 'ஈஷா' என்ற பக்தி ஆல்பத்தில் மீரா பாடியிருக்கிறார்.

நல்ல குரல் வளம் உள்ள மம்தா, சந்தியா சினிமாவிலும் பாடி வருகின்றவர். மீரா எப்படி...?

சான்ஸ் கிடைத்தால் வெளுத்து வாங்குவேன் என்றார் குயில் குரலில்!

வெப்துனியாவைப் படிக்கவும்