அரிதாரம் பூசிய ஹரிஹரன்!

வியாழன், 26 ஜூன் 2008 (19:39 IST)
பவர் ஆஃப் விமன் படத்தில் நடித்த பாடகர் ஹரிஹரன் மீண்டும் மேக்கப் போடுகிறார்.

ஹரிஹரனுக்கு பாடகர் தவிர இன்னொரு முகம் உண்டு. அது இசை! தனது நண்பர் லெஸ்லி லூயிஸுடன் இணைந்து இசையமைத்து பாடிய சலோனியல் கஸின்ஸ் இசை ஆல்பத்தை இசை ஆர்வலர்களால் மறக்க முடியாது.

இயக்குனர் சரணின் பிடிவாதத்தால் அவரின் மோதி விளையாடு படத்திற்கு நண்பர் லெஸ்லியுடன் இணைந்து இசையமைக்கிறார். வினய், காஜல் அகர்வால் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றில் ஹரிஹரனும் நடிக்கிறார்.

மலேசியாவில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் பாடல் காட்சிக்காக, மோதி விளையாடு டீமுடன் ஹரிஹரனும் மலேசியா செல்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்