மலையாள ரீ-மேக்கில் பாக்யராஜ்!

வியாழன், 26 ஜூன் 2008 (19:37 IST)
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'கிளாஸ் மேட்ஸ்' தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. பிருத்விராஜ், ப்ரியாமணி, ஷக்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படம் இயக்க பாக்யராஜ் முயன்று வந்தாலும் அதற்கான வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை. தனது மகன் சாந்தனுவை வைத்து இயக்குவதாக இருந்த படமும் தள்ளிப்போகிறது.

இதனால் உனக்கும் எனக்கும் படத்தில் நடித்தது போன்ற குணச்சித்திர வேடங்களில், யாரேனும் அழைத்தால் மறுப்பு சொல்லாமல் நடித்து வருகிறார் பாக்யராஜ். அப்படி ஒப்புக்கொண்டதுதான் நினைத்தாலே இனிக்கும் படம்.

ஒரு காலத்தில் தொடர்ந்து ஏழு வெள்ளி விழா படங்கள் தந்தவர் பாக்யராஜ் என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியம்!

வெப்துனியாவைப் படிக்கவும்