போலீஸ் கெடு - சென்னை திரும்புகிறார் அசின்!

வெள்ளி, 27 ஜூன் 2008 (14:27 IST)
போலீஸ் விடுத்த பத்து நாள் கெடு காரணமாக, சென்னை திரும்புகிறார் அசின்.

அசினின் சென்னை வீட்டில் பியூலா என்ற இளம்பெண் வேலை செய்து வந்தார். பியூலாவை காணவில்லை, அசின் அவரை அடிமையாக வைத்திருக்கிறார் என பியூலாவின் அம்மா புகார் கொடுத்ததைத் தொடர்ந்து மும்பையிலிருந்த அசினிடம் போலீசார் தொலைபேசியில் விசாரணை நடத்தினார்.

பியூலா தன்னுடன் பத்திரமாக இருப்பதாகவும், கஜினி ¥ட்டிங்கில் பிஸியாக இருப்பதால் ¥ட்டிங் முடிந்த சென்னை வந்து நேரில் ஆஜராவதாகவும் அசின் தெரிவித்தார்.

இது நடந்து பத்து நாட்களாகியும் அசின் சென்னை வரவில்லை. இதனால் மும்பை சென்ற தனிப்படை அசினிடமும் பியூலாவிடமும் விசாரணை நடத்தியது. பிறகு, பத்து நாட்களில் சென்னை வந்து ஆஜராகும்படி போலீசார் கெடு விதித்தனர்.

இதனால், விரைவில் சென்னை திரும்புகிறார் அசின்.

வெப்துனியாவைப் படிக்கவும்