நெப்போலியன் படத்துக்கு நோட்டீஸ்!

புதன், 25 ஜூன் 2008 (20:05 IST)
எழுத்தாளர் நீல. பத்மநாபன் தமிழின் தவிர்க்க முடியாத படைப்பாளி. இவரது தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் நாவல்கள் உலகின் எந்தமொழி இலக்கியத்திற்கும் ஒப்பானவை.

முப்பது வருடங்களுக்க முன்பே நீல. பத்மநாபனுக்கு சாகித்ய அகடாமி விருது அளிக்கப்பட்டிருக்க வே‌ண்டும். தமிழ் சூழலின் சொரணையின்மை... இந்த ஆண்டே விருது கைவரப் பெற்றது.

இப்போது நீல. பத்மநாபனுக்கு ஒரு சிக்கல். இவர் கற்பனையாக உருவாக்கிய பள்ளிகொண்டபுரம் ஊரை (இதுதான் நாவலின் பெயரும் கூட) தமிழ் சினிமா ஒன்றுக்கு பெயராக வைத்திருக்கிறார்கள். நெப்போலியன் நடிக்கும் இப்படம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தன்னுடைய அனுமதி பெறாமல் தனது நாவலின் பெயரை பயன்படுத்திக் கொண்டதாலும், பள்ளிகொண்டபுரம் நாவல் விரைவில் அதேபெயரில் திரைப்படமாக எடுக்கப்பட இருப்பதாலும், நெப்போலியன் நடிக்கும் படத்தின் பெயரை மாற்ற, தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் நீல. பத்மநாபன்.

முரண்டு பிடிக்காமல் எழுத்தாளருக்கு மரியாதை தருமா தயாரிப்பு நிறுவனம்?

வெப்துனியாவைப் படிக்கவும்