சீண்டுனவன் வாழ்ந்ததில்லை - பேரரசு பாடல்!

புதன், 25 ஜூன் 2008 (20:03 IST)
பேரரசு மீது பாடலாசிரியர்களுக்கு வருத்தம். திருப்பாச்சி தொடங்கி திருவண்ணாமலை வரை அனைத்துப் படங்களின் பாடல்களையும் பேரரசுவே எழுதுகிறார். இது பரவாயில்லை. வேறு இயக்குனர்கள் கேட்டாலும், உடனடியாக பேனாவை திறந்துவிடுகிறார், அதுதான் பாடலாசிரியர்களுக்கு கோபம்.

18 ஆம் தேதி கும்பகோணத்தில் திருவண்ணாமலை படப்பிடிப்பு தொடங்கியது. முதல் ஷெட்யூல்டே பாடல் காட்சி.

நம்ம நடை போட்டுப்புட்டா வீரநடை
நம்ம படை சிங்கப்படை
சீண்டுனவன் வாழ்ந்ததில்லை...

பேரரசுவின் பேனா உதிர்த்த எதுகை மோனைக்கு ஏற்றபடி ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, கும்பகோணத்தில் அர்ஜுனை வைத்து ஷ‌ூட் செய்தார் பேரரசு.

பாடல் எழுதி கிடைக்கும் பணத்தை சொந்த ஊரான நாட்டுக்கோட்டையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மாமன் சீராக பேரரசு கொடுத்து வருகிறாராம்.

லாரன்சின் ஏழை குழந்தைகள் இலவச அறுவை சிகிச்சைக்கு பேரரசு வழங்கிய நன்கொடையும் பாடல் எழுதி சம்பாதித்ததுதானாம்.

கொன்ற பாவம் தின்றால் போச்சு மாதிரி, எழுதிய பாவம் ஏழைக்கு வழங்கினால் போச்சு!

வெப்துனியாவைப் படிக்கவும்