சூர்யா, விஷால் - சுதந்திர தின மோதல்!

செவ்வாய், 24 ஜூன் 2008 (19:33 IST)
வருகிற சுதந்திர தினம் சினிமா ரசிகர்களுக்கு அதிரடி தினமாக அமையப் போகிறது.

கெளதம் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் வாரணம் ஆயிரம் ஆகஸ்ட் 15 வெளியாகிறது. கெளதம் இயக்கம், ஹாரிஸ் மியூசிக், ரத்னவேலு கேமரா என்று படா டீம் அது.

இதற்கும் சற்றும் சளைக்காத படம் விஷாலின் கரத்யம். 12 கோடி பட்ஜெட் என்பதே மிரட்டல். இசைக்கு ஹாரிஸ், கேமராவுக்கு ஆர்.டி. ராஜசேகர், வில்லனாக உபேந்திரா என சத்யத்திலும் சவுண்ட் பார்ட்டிகள்.

படம் முடிந்தாலும் போஸ்ட் புரொடக்சன் முடிய நாளாகும் என்பதால், ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என முடிவு செய்துள்ளார்கள்.

இரண்டும் எதிர்பார்ப்பை கிளப்பும் படங்கள் என்பதால், ஆகஸ்ட் 15 மோதலுக்கு இப்போதே தயாராகிவிட்டனர் கோடம்பாக்க பார்வையாளர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்