புதுமுகங்களின் தீயவன்!

செவ்வாய், 24 ஜூன் 2008 (15:52 IST)
சென்னை ஃபிலிம் சேம்பரில் தீயவன் படத்தின் இசை வெளியீட்டு விழா. மைக்கைப் பிடித்த ராதிகா, பிரபலங்களை வைத்து பிரமாண்ட படங்களை எடுப்பதைவிட, புதுமுகங்க‌ளவைத்து பட்ஜெட் படமெடுப்பதுதான் சாதனை என்று பொரிந்தார்.

தீயவனில் நடித்திருப்பவர்களில் அனேகம் பேர் புதுமுகங்கள். ஈஸ்வர் கிரியேஷன்ஸ் சார்பில் படத்தை தயாரித்து இயக்கியிருப்பவர் கதிர்.

ஒரு காடல் காட்சி முழுக்க 3டி எஃபெக்டில் எடுத்திருக்கிறார்களாம். இசை மேதை எல். வைத்யநாதனின் மகன் எல்.வி. கணேசன் இசை.

ஒரு மாணவன் மூன்ற பெண்களை காதலித்து கைவிடுவதுதான் கதை என்று கிசுகிசுத்தது விழாவுக்கு வந்த படக்குழு. காதலித்து என்றால் கட்டில் வரை சென்று என்று அர்த்தம். படம் முழுவதும் கவர்ச்சியில் சுனாமியே உருவாக்கியிருக்கிறார் நாயகி மிதுனா.

சென்சாரின் கத்திரிக்கு தலைவலியாக தீயவன் இருப்பான் என்பதை படத்தின் ஸ்டில்களே சொல்லிவிடுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்