ஜூன் 13 ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் சென்னை வந்து அன்று இரவே மும்பை திரும்பியிருக்கிறார் அமீர் கான். இந்த திடீர் வருகை பற்றி அமீர் கானை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸுக்கே தெரியாது என்பதுதான் விசேஷம்.
ஜூன் 13 முருகதாஸின் திருமண நாள். இதற்காக மும்பையிலிருந்து அவர் சென்னை வந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து அமீர் கானும் சென்னை வந்துள்ளார். இது முருகதாஸுக்கே தெரியாது.
முருகதாஸின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த அமீர் கான், அன்று மாலை முருகதாஸ் அளித்த பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு அன்றிரவே ஃபிளைட்டில் மும்பை திரும்பினார்.
அமீர் கானின் எதிர்பாராத வருகையால் நெகிழ்ந்து போன முருகதாஸ், அமீர் போல் வருமான என்கிறார். உண்மைதானே!