ரிச்சர்ட் தனது பெயரை ரிஷி என்று மாற்றி நடித்துக் கொண்டிருக்கும் படம் கல்லுக்குள் ஈரம். இது தவிர ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணாவின் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கிறார்.
கல்லுக்குள் ஈரம் காதல் கதை. ஒரு பெண்ணை கல்லூரி மாணவனும் காதலிக்கிறான், தாதா ஒருவனும் காதலிக்கிறான். கடைசியின் அப்பெண் யார் கைக்கு போய் சேருகிறாள் என்பது கதை.
ரிஷிக்கு ஜோடி கோபிகா. மூமைத்கான், அபிநயஸ்ரீ, சுமன் ஆகியோரும் படத்தில் உண்டு. கே.எஸ். லிங்கன் இயக்கம்.
தெலுங்கில் தயாரான இப்படத்தில் சில காட்சிகளை தமிழுக்காக புதிதாக எடுத்து இணைத்திருக்கிறார்கள். தமிழக அரசின் வரிச் சலுகையை பெறுவதற்கே இந்த காட்சிகளும் இணைப்பும்.