எஸ்.ஏ. சந்திரசேகரன் படம் எடுக்கும் விதம் குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். அவரின் வியாபார யுக்தி குறித்து ஒரே கருத்துதான்... மனிதர் பிஸினசில் புலி!
சுக்ரன் என்ற படத்தை எஸ்.ஏ.சி. எடுத்தார். ரவிகிருஷ்ணா ஹீரோ. மார்க்கெட் வேல்யூ இல்லாத சுக்ரனில் விஜயை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து சுக்ரனின் விற்பனையை கண்டபடி உயர்த்தினார்.
இந்தமுறை எஸ்.ஏ.சி. தனது பந்தயம் படத்தில் விஜயை நடிக்க வைக்கப் போவதில்லை. படத்தின் நாயகன் நிதின் சத்யா பந்தயத்தில் விஜயின் ரசிகராக வருகிறார். அப்புறமென்ன... படம் நெடுக விஜய் படத்தையும் பாட்டையும் போட்டு பட்டையை கிளப்பப் போகிறார்.