மர்மயோகியில் நவீன கேமரா!

வெள்ளி, 13 ஜூன் 2008 (16:37 IST)
தசாவதாரம் ரிலீசுக்கு முன்பே மர்மயோகியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் கமல். ஹேமமாலினி இதில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவி.கே. சந்திரனின் உதவியாளர் மர்மயோகிக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாலிவுட்டில் ரெட் கேமராதான் இப்போது பிரபலம். ஃபிலிமுக்கு பதில் கேசட்டை போட்டால் போதும். ஃபிலிமை விட துல்லியமாக இந்த ரெட் கேமரா படம் பிடிக்குமாம். சூப்பர் 35 கேமராவுக்கெல்லாம் இது தாத்தா என்கிறார்கள்.

மர்மயோகியில் வேறு என்னென்ன நவீன தொழில்நுட்பங்களை கமல் கையாளுகிறார் என்பது இனி ஒவ்வொன்றாக வெளியாகும். ஆச்சரியப்படத் தயாராக இருங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்