மனோரமாவை அழவைத்த கமல்!

வெள்ளி, 13 ஜூன் 2008 (16:35 IST)
மேடையும் மைக்கும் கிடைத்தால் போதும், ஊரே உருகிற மாதிரி அழுது தீர்த்து விடுவார் மனோரமா. துயரம், சந்தோஷம், பாராட்டு எதுவானாலும் ஆச்சியின் ஒரே வெளிப்பாடு அழுகை... அழுகை.

தசாவதாரம் படத்தை சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் சத்யராஜ், பிரபு, சரத்குமார், பாலச்சந்தர், தரணி, விஷ்ணுவர்தன், ராதிகா, சூர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பார்த்தனர். இந்தப் பட்டியலில் நாகே¤ம், மனோரமாவும் உண்டு.

படம் முடிந்ததும் கமலின் கைகளைப் பிடித்த ஆச்சி நா தழுதழுக்க கண்ணீர்விட்டு அழுதார். கமலின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியம் தாங்காமல் அழுத அழுகை அது.

·போர் ·பிரேம் திரையரங்கில் ரஜினிக்கு தசாவதாரம் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது. படம் முடிந்ததும் கமலை பாராட்டினார் ரஜினி.

வெப்துனியாவைப் படிக்கவும்