சிலந்தியின் இரண்டாவது ரிலீஸ்!

வியாழன், 12 ஜூன் 2008 (20:20 IST)
முன்னா, மோனிகா என பிரபலமில்லாத இருவர். ஆதி என்ற அறிமுக இயக்குனர். பொதுவாக இதுபோன்ற காம்பினேஷனில் தயாராகும் படம் இரண்டு நாளை தாண்டாது. ஆனால், ஆச்சரியம் சிலந்தி படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் மொய்க்கிறார்கள்.

க்ரைம் த்ரில்லரான சிலந்தியின் ஹைலைட்டை மோனிகாவின் குளிரடிக்கும் கவர்ச்சிதான். படத்தை டிஜிட்டலில் எடுத்ததால், முப்பது திரையரங்குகளில் மட்டுமே திரையிட்டனர். எதிர்பார்த்ததைவிட படத்துக்கு நல்ல வசூல்.

ஃபிலிமில் மட்டுமே படத்தை ஓட்ட முடியும் திரையரங்கு உரிமையாளர்களும் சிலந்தி படத்தை கேட்கிறார்களாம். அதனால் படத்தை ஃபிலிமுக்கு மாற்றி நாற்பது பிரிண்டுகள் போடுகிறார்கள். இதில் கணிசமான பிரிண்டுகள் கேரளாவுக்கு செல்கிறது.

சிலந்தியின் நாயகன் முன்னா மலையாளிகளுக்கு பரிட்சயமான முகம். தவிர இருக்கவே இருக்கிறது மோனிகாவின் கவர்ச்சி. முதல் ரிலீஸை விட இரண்டாவது ரிலீஸையே ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார் தயாரிப்பாளர் சங்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்