பாவனாவின் கேரியர் டேக் ஆஃப் ஆனது மலையாளத்தில். அது தமிழ்நாடு, ஆந்திரா எல்லைகளைக் கடந்து லேண்ட் ஆகயிருப்பது பாலிவுட்டில்.
ஆம், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருந்த பாவனா, முதன் முறையாக இந்திப் படம் ஒன்றில் நடிக்கிறார். படத்தில் பாவனாவுக்கு ஜோடி சன்னி தியோல்.
யார் இயக்கம், யார் தயாரிப்பு என்ற விவரங்களைக் கூற மறுக்கிறார் பாவனா. படத்தின் பயோடேட்டா தெரிந்தால் வாய்ப்பை தட்டிப் பறித்துவிடுவார்களோ என்ற பயம்.
பாவனாவுக்கு பாலிவுட் விரும்பும் கவர்ச்சியும் இல்லை, கொடி இடையும் இல்லை. இரண்டும் இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறார்?