கர‌ணி‌ன் கனகவே‌ல் கா‌க்க!

புதன், 11 ஜூன் 2008 (18:41 IST)
மலைய‌ன் ப‌ட‌ம் தொட‌ங்‌கிய ஓ‌ரிரு நா‌ளி‌ல் கர‌ணி‌‌ன் பு‌திய பட அ‌றி‌வி‌ப்பு. இ‌ந்த முறையு‌ம் அ‌றிமுக இய‌க்குந‌ரி‌ன் பட‌த்‌தி‌ல் நடி‌க்‌கிறா‌ர். பட‌த்‌தி‌ன் பெய‌ர் கனகவே‌ல் கா‌க்க.

பெயரை‌க் கே‌ட்கு‌ம்போதே கதாநாயக‌ன் கர‌ணி‌ன் பெய‌ர் கனவே‌ல் எ‌ன்பது தெ‌ரி‌ந்து‌விடு‌ம். கரணு‌க்கு இ‌தி‌ல் ஜோடி ஹ‌ரி‌ப்‌ரியா. த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் ‌சில காலமாக‌க் காணாம‌ல் போ‌யிரு‌ந்த கலாபவ‌ன் ம‌ணி கனகவே‌ல்கா‌க்க மூல‌ம் ‌திரு‌ம்‌பி வரு‌கிறா‌ர்.

சர‌ண், ஹ‌‌ரி ஆ‌கியோ‌ரிட‌ம் ப‌ணியா‌ற்‌றிய க‌வி‌ன் பாலா இய‌க்க‌ம். எழு‌த்தாள‌ர் பா.ராகவ‌ன் வசன‌ம்.

க‌ந்தா என‌ப் பெய‌ர் வை‌க்க‌ப்ப‌ட்ட படமே கனகவே‌ல் கா‌க்க எ‌ன்று மா‌றி‌யிரு‌ப்பது கொசுறு செ‌‌ய்‌தி.

வெப்துனியாவைப் படிக்கவும்