சிம்பு - எதிரிக்கு எதிரி நண்பன்!

சனி, 7 ஜூன் 2008 (19:49 IST)
மேலுக்கு நண்பன், மச்சான். நிஜத்தில் ஆளை கவிழ்க்கும் நெம்புகோல் வேலைகள். இப்படித்தான் அகம் ஒன்றாகவும், புறம் வேறொன்றாகவும் சிம்பு-தனுஷ் உறவு ஓடிக் கொண்டிருக்கிறது.

தனுஷை வைத்து தொடர்ந்து இரண்டு ஹிட் கொடுத்தவர் பூபதி பாண்டியன். திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் தெலுங்கு உரிமையை எனக்குத் தெரியாமல் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா விற்றுவிட்டார் என கவுன்சிலில் பூபதி பாண்டியன் புகார் கொடுக்க, தனுஷ் - பூபதி பாண்டியன் உறவில் விரிசல்.

இந்த விரிசலில் விரல் வித்தையை காட்டுகிறார் சிம்பு. அதாவது பூபதி பாண்டியனின் இயக்கத்தில் நடிக்க காய் நகர்த்துகிறாராம். சிம்பு நடித்தால் தனுஷ் பிறகு பூபதி பாண்டியனை மறந்துவிட வேண்டியதுதான்.

எதிரிக்கு எதிரிதானே நண்பன்.

வெப்துனியாவைப் படிக்கவும்