சத்யராஜின் குவார்ட்டர் கோவிந்தன் கதை!

சனி, 7 ஜூன் 2008 (19:18 IST)
முப்பது வருடங்களுக்கு முன்னால், சத்யராஜ் சட்டம் என் கையில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரம். விழா ஒன்றில் பேச சத்யராஜை அழைத்தனர். பேசவேண்டிய நேரம் நெருங்கிய போது சத்யராஜுக்கு பயம். பிறகு ஒரு குவார்ட்டர் குடித்து வந்து, குவார்ட்டர் கோவிந்தனாக விழாவில் பேசியிருக்கிறார்.

இந்த மலரும் நினைவை சத்யராஜ் பகிர்ந்துகொண்டது, சூர்யா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில். படத்தின் நாயகன் விஜய சிரஞ்சீவி பயமில்லாமல் பேசியதைப் பார்த்து வியந்து சத்யராஜ் தனது குவார்ட்டர் அனுபவத்தை விவரித்தார்.

·பிலிம் சேம்பரில் நடந்த விழாவில் ட்ரெய்லருடன் மூன்று பாடல்களையும் ஒளிபரப்பினார்கள். விஜய சிரஞ்சீவியின் தந்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் என்பதால், ஷாவோலின் டெம்பிள் சாதுக்களைப் போல அனாயாசமான வித்தைகள் காட்டியிருக்கிறார் விஜய சிரஞ்சீவி.

சத்யம்ராஜ், ஜெயம் ரவி என விழாவில் பேசிய அனைவரும் அவரது சண்டைக் காட்சியை சிலாகித்துப் பாராட்டினர்.

விழாவில் பாராட்டப்பட்ட இன்னொரு விஷயம், பத்திரிக்கையாளர் அமலன் விழாவை அழகு தமிழில் தொகுத்து வழங்கிய விதம். விழா முடிந்த பின்பும் காதுக்கு அது இன்பத்தேன்!

வெப்துனியாவைப் படிக்கவும்