மணிரத்னம் வெளியிட்ட ஜெயம் கொண்டான் ஆடியோ!

சனி, 7 ஜூன் 2008 (19:14 IST)
சத்யஜோதி ஃபிலிம்ஸின் ஜெயம் கொண்டான் ஆடியோ இன்று காலை சத்யம் காம்ப்ளக்ஸில் வெளியிடப்பட்டது. ஆடியோ சி.டி.யை மணிரத்னம் வெளியிட கமலும், கேசட்டை ராம. நாராயணன் வெளியிட சத்யராஜும் பெற்றுக் கொண்டார்.

படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், இயக்குனர் கண்ணன், நாயகன் வினய், நாயகிகள் பாவனா, லேகா வாஷிங்டன், ஆர்.எம். வீரப்பன், கலைப்புலி ஜி. சேகரன் என அரங்கு நிறைந்த கூட்டம்.

ஜெயம் ரவி, கமலின் ஆளவந்தானில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணிபுரிந்ததை பேச்சில் குறிப்பிட்டார்.

இசை வெளியீட்டு விழாவில் வசைதான் அதிகம். கலைப்புலி ஜி. சேகரன் கார்ப்பரேட் கம்பெனிகளை வார்த்தைகளில் தாளிக்க, சரத்குமாரும், கமலும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவு குரல் கொடுத்தனர். கார்ப்பரேட் கம்பெனிகளின் வருகை என்பது வளர்ச்சி. வளர்ச்சியைப் பார்த்து அஞ்சக்கூடாது. அதனை விஞ்ச வேண்டும் என்றால் கமல்.

இனிமையாக முடிய வேண்டிய இசை விழா, காண்ட்ரவர்ஸி மேபச்சால் ஏ.சி.யை மீறி வியர்க்க வைத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்