அம்மா வேடம் - அதிர்ந்த சினேகா!

வெள்ளி, 6 ஜூன் 2008 (19:56 IST)
நாலு வயசு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கலாம். நம்முடைய வயசையொத்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கச் சொன்னால்...?

இதுதான் சினேகாவின் குமுறல்!

விஷயம் இதுதான். கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் படத்தில் சரத்குமார் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் அல்லவா சினேகா. இதில் சரத்குமாருக்கு இரண்டு வேடங்களாம். இதில் வயதான சரத்குமாருக்கு ஜோடி சினேகா. கதைப்படி இவர்களுக்கு ஒரு மகள். அந்த மகள் வேறுயாருமில்லை, ஃபீல்டில் சினேகாவுக்கு போட்டியாக இருக்கும் ஸ்ரேயா!

கால்ஷீட் கொடுத்த பிறகே இந்த அம்மா மகள் கதை சினேகாவுக்கு தெரியவந்தது. என்னுடைய வயசு உள்ள ஒரு நடிக்கு நான் அம்மாவா என்று குமுறியவர், அமெரிக்காவில் இருந்தபடியே, அதற்கு வேறு ஆளைப் பாருங்கள் என்று கூறிவிட்டார். இப்போது அழகான அம்மா ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்