அவனவன் இரண்டெழுத்தில் பெயர் தேடிக் கொண்டிருக்க, சீனப் பெருஞ்சுவர் மாதிரி ஒரு பெயர், சேரநாட்டு சோலையிலே!
விஷயம் என்னவென்று கேட்டால், விளக்கம் அதைவிட பெரிதாக வருகிறது. கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் எல்லையில் நடக்கும் காதல் கதையாம் இது. அதனால்தான் சேரநாட்டு சேலையிலே என்ற பெயராம்.
பெயரில் சேரநாடு வருவதால் கொச்சின் ஹனிபா முதல் ஷகிலா வரை பல சேரநாட்டு நடிகர்களை பிடித்துப் போட்டிருக்கிறார்கள். நம் பக்கமிருந்து மணிவண்ணன், பாண்டியராஜன், லிவிங்ஸ்டன். இவர்கள் தவிர இளம் ஜோடி ஒன்றும் உண்டு.
சக்சஸ் பிலிம்ஸ் சார்பில் கவிதாசன் தயாரிக்க, எம். பிரதாப் முரளி படத்தை இயக்குகிறார். நாளை ஏவி.எம். ஆர்.ஆர். ஸ்டுடியோவில் படத்தின் பூஜை. பிறகு அப்படியே படப்பிடிப்புக்கு கிளம்புகிறதாம் சேரநாட்டு சோலையிலே பட டீம்.