நடிகை வீட்டு நாய் காணாமல் போனாலே நாடு பதறும். ஆளே காணாமல் போனால்? அல்லோகலப் படுத்திவிட்டனர் போலீசார்.
சேத்துப்பட்டில் உள்ள கோல்டன் அபார்ட்மெண்ட்ஸில் வசித்து வருகிறார் அசின். இவரது வீட்டில் பியூலா என்ற இளம்பெண் வேலை பார்த்து வந்தார். திடீரென்று பியூலாவின் தாயார் மகளைக் காணவில்லை என கமிஷனர் அலுவலகத்தில் புகார் தந்தார்.
அசின் விவகாரம் என்பதால் அட்டென்ஷனுக்கு வந்த போலீஸ், உடனே விசாரணையை முடுக்கியது. மும்பையில் தங்கியிருக்கும் அசின் தொலைபேசி மூலமாக விசாரிக்கப்பட்டார்.
பியூலா மும்பையில் தன்னுடன் பாதுகாப்பாக இருப்பதாக அசின் தெரிவித்த பிறகே பரபரப்பு அடங்கியது.
புகார் கொடுத்த உடனே சுறுசுறுப்பாக செயல்பட்டு வதந்திகளுக்கு இடம்தராமல் உண்மையை வெளிக்கொண்டு வந்த காவல் துறையை பாராட்டியே ஆக வேண்டும். என்னே ஒரு கடமை உணர்ச்சி!