அச்சமுண்டு அச்சமுண்டு படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் படப்பிடிப்பு முடியும் தேதி ஜூலை 5 என்று அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் அமெரிக்க விசா காலாவதியாகிறதாம்.
முழுக்க அமெரிக்காவில் தயாராகும் இந்தப் படத்துக்காக நியூஜெர்சி சென்றிருக்கிறார் பிரசன்னா. இவரது மனைவியாக நடிக்கிறார் சினேகா.
குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருந்த மென்பொருள் இன்ஜினியர் அருண் வைத்தியநாதனின் முதல் படைப்பு இது. அமெரிக்காவில் படப்பிடிப்பு நடப்பதால் 90 சதவீத நடிகர்களை ஹாலிவுட்டிலிருந்து பொறுக்கியிருக்கிறார்கள். John Osha போன்ற பிரபல முகங்களும் படத்தில் உண்டு.
ஈஸ்ட் வெஸ்ட் புரொடக்சன் ஸ்ரீனிவாசன் படத்தை தயாரிக்கிறார்.