கிளாமருக்கு பயன்படும் கறிவேப்பிலை நடிகைகள் எல்லா காலத்திலும் ஒரு டஜன் இருப்பார்கள். இந்த ஒரு டஜனையும் ஒரு படத்தில் பார்த்தால்?
இதயம் பலவீனமானவர்களுக்கு ஆபத்து நிச்சயம். அப்படியொரு ஆபத்தான விளையாட்டை தொடங்கியிருக்கிறார் இயக்குனர் சத்யம்.
கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் வீட்டில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தெருவில் ஒரு கொலை நடக்கிறது. கொலை நிகழும்போது அங்கிருந்தவர்கள் ஆறு பேர். அந்த ஆறு பேரில் ஒருவர்தான் கொலைகாரன். அந்த ஒருவன் யார் என்பதை அறிய ஆறு பேரையும் விசாரிக்கிறது போலீஸ்.
சத்யம் இயக்கும் பத்துக்கு பத்து படத்தின் கதையிது. கேட்டால் க்ரைம் த்ரில்லர் போலிருக்கும் இதில் சோனா, அபிநயஸ்ரீ, லக்ஷா, ப்ரியங்கா என கோடம்பாக்கத்தின் பெரும்பான்மை கிளாமர்கள் சங்கமிக்கின்றன. க்ரைம் கதையில் கிளாமருக்கு என்ன வேலை?
போலீஸ் விசாரணை திசை மாறிடப் போகுது, ஜாக்கிரதை சத்யம் சாப்!